Sunday, October 5, 2014

புதியதலைமுறையோடு நான்


முகம் தெரியாத ஒருத்தர் மேடம் எனக்கு உங்கள ரொம்ப புடிக்கும்னு சொல்லும்போது கிடைக்கும் சந்தோஷத்தை எனக்கு முதல்முதலில் தந்தது புதியதலைமுறை. இரண்டரை ஆண்டுகள் சட்டுன்னு வந்துட்டு போன இனிமையான ஒரு கனவு போல் கடந்து விட்டது. எவ்வளவு தயக்கத்தோடும் பயத்தோடும் அலுவலகத்திற்குள் சென்றேனோ அதைவிட பலமடங்கு நினைவுகளோடும், பலருடைய அன்போடும் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியேறினேன். சிலரிடமிருந்து வந்த எதிர்பாராத கண்ணீர், இந்த அலுவலகம் வெறும் கட்டிடம் மட்டுமில்லை அதையும் தாண்டிய நினைவுகளை தாங்கி நிற்கும் என்பதை உணர்த்தியது. 

சமுதாயத்தில் வளர்ச்சியடைந்த சூழலை மட்டும் பார்த்து வளர்ந்த எனக்கு என்னை தாண்டிய உலகம் ஒன்னு இருக்கு அதில் ஒன்னுமே இல்லாதவங்க இருக்கிறாங்க என்பதை உண்ர்த்தியது புதியதலைமுறை. எனக்கே தெரியாமல் எனக்கு நிறைய கற்றுக் கொடுத்து, என்னுடைய தவறுகளை வளர்ச்சிக்கான வழி காண்பித்து திருத்தியது புதியதலைமுறை. திரும்பி பார்க்கும்போது ரொம்ப தூரம் கஷ்டமே இல்லாம ரொம்ப ஈஸியா வந்துட்டேன்ங்கிறது தெரியுது.



இங்கே சேர்ந்த முதல் நாள் news head – srini sir க்கிட்ட give me a place sir.. I will learn and grow ன்னு சொன்னேன். அவரது பதில் we don’t give place.. if you are capable create one for you ன்னு சொன்னார். I Hope I did create my own place.. thank you srini sir. அடுத்து Ram sir.. சில facebook பக்கங்களில் நான் புதியதலைமுறையிலிருந்து வெளியேறியதற்கு காரணமாக இவரை குறிப்பிட்டிருந்தனர். With all due respect I would like to register my stand.. எனக்கு முன் வெளியேறிய அல்லது வெளியேற்றப்பட்டவர்களின் நிலை எனக்கு தெரியாது. என் வரையில் ram sir, என் அப்பாக்கு அடுத்தபடியாக, என்னுடைய குழப்பங்களுக்கும், சந்தேகங்களுக்கும் பதில் மட்டுமல்ல நானாக முடிவெடுக்க நம்பிக்கை அளிப்பவர். புதியதலைமுறை பணிச்சூலால் நான் வெளியேறினேன் என்றால், இதைவிட சிறந்த சூழல் எனக்கு வேறெங்கும் கிடைக்கப்போவதில்லை என்பது எனக்கு தெரியும். I am proud to say I was like princess and I left like a princess with all love and blessing from my management and boss. 

அடுத்து news7-ஆ என்றால் நிச்சயமாக இல்லை. நான் விலகியது புதியதலைமுறையிலிருந்து இல்லை, செய்தி துறையிலிருந்து. கொஞ்சம் மேற்படிப்பு, மற்ற நேரங்களில் பொழுதுபோக்கு தொலைக்காட்சி ஒன்றுக்காக பணியாற்ற இருக்கிறேன். செய்தி துறையில் மீண்டும் இணைய வாய்ப்பிருந்தால் அப்பவும் புதியதலைமுறையில் இணைய தான் என்னுடைய முதல் முயற்சி இருக்கும். 

ஏற்கனவே 4 paragraph தாண்டிடுச்சு. Special people list தனி பதிவாக வச்சிக்றேன் 

//
PS: pic clicked right before my last bulletin with PT. a very special one for me   thank you alllll for all the love and support. அன்பும் ஆதரவும் தொடரும் என்று நம்புகிறேன்.


Sikkanam






Kalyanam Mudhal Kadhal Varai